ஒன்றிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை: நாட்டில் எல்ஐசி உள்ளிட்ட அரச சார்பு நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து, தல்லாகுளம் பெருமாள் கோவில் அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் மாவட்டத்தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் செய்யதுபாபு முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தல்லாகுளம் முருகன், போஸ், ஜெய்ஹிந்துபுரம் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் துரையரசன். மீர்பாஷா, நகர் மாவட்ட துணைத்தலைவர்கள் பறக்கும்படை பாலு, சுந்தரமகாலிங்கம், மலர் பாண்டியன். மகேஸ்வரன், மகிளா காங்கிரஸ் தலைவி ஷாநவாஸ் பேகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் பிற்போக்கான நடவடிக்கைகளை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: