வால்பாறை:வால்பாறையில் உலக பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை நகராட்சி வளாகத்தில் நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி செல்வம் தலைமையிலும், நகராட்சி பெண் கவுன்சிலர்கள் முன்னிலையில் நடைபெற்ற பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் திரளான பெண்கள் பங்கேற்றனர். கோலப்போட்டி, கயிறு இழுத்தல்உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் பாலு பரிசுகள் வழங்கினார்.நகராட்சி அலுவலக வளாகம் நேற்று மகளிருக்கான பல்வேறு போட்டிகளால் கலகலப்பாக காணப்பட்டது.வால்பாறை அரசு கல்லூரியிலும் பெண்கள் தின கொண்டாட்டம் களை கட்டியது. பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகளை கல்லுாரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.