×

ரயிலில் வந்த 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மகளிர் தினத்தை முன்னிட்டு சத்தி நகராட்சி தலைவருக்கு தனியார் அமைப்பு விருது

சத்தியமங்கலம்:  மகளிர் தினத்தை முன்னிட்டு சத்தி நகராட்சி பெண் தலைவர் ஜானகி ராமசாமிக்கு தனியார் அமைப்பு விருது வழங்கி கெளரவித்தது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் உள்ள ஆர்எம்பி நகரில் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம் சார்பில் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றியதற்கான விருது சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமிக்கு வழங்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளான வார்டு கவுன்சிலர்கள் சாவித்திரி, புஷ்பவள்ளி, குர்ஷித், லட்சுமி, புவனேஸ்வரி, பேபி, செல்வி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத்தலைவர் நடராஜ், 26வது வார்டு கவுன்சிலர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சத்தியமங்கலம் லிட்டில் பிளவர் பள்ளியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் நகராட்சியில் பணிபுரியும் 89 தூய்மை பணியாளர்களுக்கு ஒய்ஸ்மென் கிளப் சார்பில் ரூ.270 மதிப்புள்ள எவர்சில்வர் வாட்டர் பாட்டில்கள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. மேலும் தனியார் கல்லூரி சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழிப்புணர்வு பேரணியை நகராட்சி தலைவர் ஜானகி ராமசாமி கொடியசைத்து  தொடங்கி வைத்தார். இப்பேரணி, ரங்கசமுத்திரம் வழியாக சத்தியமங்கலம் பஸ் நிலையம் பகுதியில் நிறைவடைந்தது.

Tags : Chatti ,Women's Day ,
× RELATED கோவை தண்டு மாரியம்மன் கோயிலில்...