பழநியில் மகா ருத்ரயாகம்

பழநி: பழநி சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி மகா ருத்ரயாகம் நடந்தது. பழநி சங்கராலயத்தில் உலக நலன் வேண்டி மகா ருத்ரயாகம் நடந்தது. யாகத்தை முன்னிட்டு வாஸ்து ஜெபம், ஸ்தலசுத்தி, மகா கணபதி ஹோமம், ரித்விக் வரணம், கடஸ்தாபனம், மஹாருத்ர மகா சங்கல்பம், ருத்ர ஜெபம், துர்கா சூக்த ஹோமம், நவக்ரஹ ஹோமம், சுதர்சனஹோமம், விஸ்ணுசகஸ்ர நாம ஜெபம், ருத்ர க்ரமார்ச்சனை,  பகவதி சேவை உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடந்தது. தொடர்ந்து 33 கலசங்களில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 50க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் மூலம் ஹோமங்கள் செய்யப்பட்டன. 1331 முறை ருத்ர ஜெபமம், 121 முறை ஹோம பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை மகா ருத்ர யாக கமிட்டி மற்றும் சங்கராலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: