×

நிலக்கோட்டை அருகே மட்டப்பாறையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

நிலக்கோட்டை: நிலக்கோட்டையையை அடுத்த வைகை பாசனப்பகுதியான மட்டப்பாறையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த வைகை பாசனப் பகுதியான மட்டப்பாறை, விளாம்பட்டி, தாதன்குளம், முத்துலிங்கபுரம் ஆகிய பகுதி விவசாயிகள் பயனடையும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் உத்தரவின்பேரில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் ஆலோசனைப்படி நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் மட்டப்பாறையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் மகேந்திரன், துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய துறை செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுமாறன், கவுன்சிலர் தியாகு மற்றும் ஒன்றிய பேரூர் கிளை கழக நிர்வாகிகள் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Mattaparai ,Nilakottai ,
× RELATED மரக்கன்றுகள் நடல்