செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டியில் நாய் கடித்து 15 பேர் காயம் 2 ஆடுகள் பலி

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த எஸ்.பாறைப்பட்டி கிராமத்தில், நேற்று புதன்கிழமை திடீரென குடியிருப்புக்குள் புகுந்த நாய்கள் ராமாயி (60) கருப்பாயி (53) இந்திரா (60) சிறுமி ஹன்சிகா (7) பிரியா (28) இந்திராணி (48) ராஜாத்தி (60) சஞ்சய், ராஜேஷ் உட்பட 15-க்கு மேற்பட்டோரை கடித்ததில், காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், படுகாயம் அடைந்த ராமாயி என்பவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்த நாய்கள் கடித்ததில், சாமிதேவர் என்பவருடைய 2 ஆடுகள் பலியாகியது. இதே போல எஸ்.பாறைப்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் மாடு நாய் கடித்ததில் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் கோழிகள், குட்டி நாய்கள் என, வெறி நாய்கள் கண்ணில் தென்பட்டது அனைத்தையும் கடித்து குதறி வருகிறது. அதே பகுதியில் குழந்தைகள் படிக்கும் 2 அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றின் கேட்டை மூடி, குழந்தைகளை பாதுகாப்பாக வைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்கப்பட்டது. எனவே நாயை பிடிக்க வேண்டும் என, இந்த பகுதி கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: