திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சி மொழி திட்ட விளக்கக் கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சி மொழித் திட்ட விளக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நேற்று வரை ஒரு வார காலத்திற்கு ஆட்சி மொழி சட்ட வார விழா நடைபெற்றது. இதன் நிறைவு நாளான நேற்று திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார். ஆசிரியர் தமிழ் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் துணை இயக்குனர் சந்திரா, பொது மக்கள் ஆட்சி மொழி சட்டத்தை அறியும் வகையிலும், அரசு பணியாளர்கள் மற்றும் தமிழ் அமைப்புகள் அறியும் வகையில் ஆட்சி மொழித் திட்ட விளக்கம் குறித்து பேசினார். இதில் ஏராளமான கலந்து கொண்டனர்.

Related Stories: