×

13ம் தேதி வெளியிட கூத்தாநல்லூர் ஆணையர் முடிவு நன்னிலம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை அரிவாளால் ெவட்டி ரூ.8.50 லட்சம் பறிமுதல்: 6 பேர் கைது

திருவாரூர்: திருவாரூர் விளமல் பகுதியை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (53) இவர் நன் னிலம் அடுத்த வீதி விடங்கன் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை யில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடையில் விற்பனையான தொகை ரூபாய் 8 லட்சத்து 54 ஆயிரத்து 470 யை தனது கை பையில் எடுத்துக் கொண்டு கடந்த திங்கள்கிழமை மதியம் 3 மணி அளவில் நன்னிலத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப் பட்ட வங்கி ஒன்றில் செலுத்துவதற்காக பைக்கில் சென்றார்.அப்போது, வாஞ்சியம் நேரு நகர் அருகே சென்ற போது எதிர் திசையில் இருந்து முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தட்சிணாமூர்த்தி வழிமறித்து பணப் பையை பறித்தனர். அதை தடுத்த அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயமடைந்த தட்சிணாமூர்த்தி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை உடனடியாக பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்பி சுரேஷ் குமார் உத்தரவிட்டார்.

இதையடுத்து, தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த சம்பவ த்தில் ஈடுபட்ட வாஞ்சியம் பகுதியை சேர்ந்த சேவாக், ரமேஷ், அரவிந்தன், அருள் ஜீவா ,பாண்டிச்சேரியை சேர்ந்த இளையராஜா, விழுப்புரம் மாவட்ட த்தை சேர்ந்த முரளிதரன் ஆகிய ஆறு நபர்களை கைது செய்து அவர்களிட மிருந்து ரூ 8,54,470 யை பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து பண த்தை பறிமுதல் செய்த தனிப் படையினர் மற்றும் நன்னிலம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பாராட்டினார்.

Tags : Koothanallur ,Commissioner ,Tasmac ,Nannilam ,
× RELATED சென்னையில் 40 காவல் ஆய்வாளர்களை பணியிட...