×

இலுப்பூரில் திமுக பொதுக்கூட்டம்

விராலிமலை: இலுப்பூரில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சின்ன கடைவீதி அண்ணா திடலில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன் பங்கேற்று பேசினர். கூட்டத்திற்கு அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். இலுப்பூர் பேரூர் கழக செயலாளர் விஜயகுமார், அவைத்தலைவர் துரை ராஜேந்திரன் வரவேற்றனர். கூட்டத்தில் திமுக மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றினார் இதில் திமுக வளர்ந்து வந்த பாதை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுகவிற்கு ஆற்றிய பணிகள் குறித்தும், இந்தியாவே உற்று நோக்கும் திமுகவின் செயல் திட்டங்களான புதுமைப் பெண், நான் முதல்வன், பள்ளிகளில் காலை உணவு திட்டம், மகளிர்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டதை நினைவூட்டி பேசினார். விழாவில் அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரன், மாவட்ட மாணவரணி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மதியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் இலுப்பூர் பேரூராட்சி துணைத்தலைவரும், பேரூர் கழக இளைஞர் அணி அமைப்பாளருமான செந்தில்ராஜா நன்றி கூறினார். ஏற்பாடுகளை அன்னவாசல் வடக்கு ஒன்றியம் மற்றும் இலுப்பூர் பேரூர் கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.



Tags : DMK ,Ilupur ,
× RELATED இலுப்பூரில் பதுக்கல் ஆற்று மணல் பறிமுதல்