×

பொன்பரப்பி அரசு பள்ளியில் இயந்திரவியல் மாணவர்கள் செய்முறை தேர்வு

ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இயந்திரவியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை அகத்தேர்வுகள் புறத்தேர்வுகள் ஆய்வு செய்தனர். பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளி அடிப்படை இயந்திரவியல் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பள்ளி தலைமை ஆசிரியர் முத்துக்குமரன் முன்னிலையில் நேற்று துவங்கியது. இந்த செய்முறை தேர்வினை தேர்வாளர் பொன்பரப்பி தொழிற்கல்வி ஆசிரியர் செங்குட்டுவன், கோடாலி கருப்பூர் தொழிற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன் ஆகியோர் செய்முறை தேர்வினை ஆய்வு செய்தனர்.

Tags : Ponbarappi ,
× RELATED ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு 1500 டன் பச்சரிசி மூட்டைகள் வந்தது