தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு உடையார்பாளையம் அரசு மகளிர் பள்ளியில் உலக மகளிர் தின விழா

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உடையார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை கங்காதேவி தலைமை வகித்தார். ஆசிரியர் ரகுபதி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார் கலந்துகொண்டு மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி சிறப்பித்தார். மகளிர் தினத்தை பற்றி தமிழாசிரியர் ராமலிங்கம், பாவை சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் பேரூராட்சி உறுப்பினர் கீதா கொளஞ்சி நாதன் முன்னிலை வகித்தார். பள்ளியின் மூத்த ஆசிரியை காவேரியை பாராட்டி பேசி கவுரவிக்கப்பட்டது. ஆசிரியர் காமராஜ் பள்ளி மாணவிகள் ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிப்புவழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் கணித ஆசிரியை தமிழரசி,சாந்தி, வனிதா, லூர்து மேரி, சுரும்பார்குழலி, ராஜசேகரன், மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் . முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா நன்றி கூறினார்.

Related Stories: