×

11 மனுக்களுக்கு உடனடி தீர்வு தாட்கோ மூலம் ஆதி திராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பிற்கு இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்ட செய்தி குறிப்பு ;தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்க இணையதளம் மூலம் புதியதாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை அமைச்சர் அவர்கள் 2022-23 ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் மோட்டார் குதிரை திறனுக்கேற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 இலட்சம் வரை மானியத்தில் 900 ஆதிதிராவிடர் மற்றும் 100 பழங்குடியின ஆக மொத்தம் 1000 விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளாகவும், விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைத்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்கவேண்டும்.இத்திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.25,000 7.5HP (குதிரைத்திறன்) மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.27,500 , 10HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.30,000 , 15HP (குதிரைத்திறன்) மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்தில் பயனாளி 10 சதவீத பங்குத்தொகை ரூ.40,000 என்ற விகிதத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ, அரியலூர் என்கிற முகவரிக்கு வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.2017 - 2022ம் ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலளாரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொகையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல் “அ” பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைபடம், சர்வே எண். மின் வாரியத்தில் பதிவு செய்த இரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் www.tahdco.com < http://www.tahdco.com/ > என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்


Tags : Adi Dravidian ,TADCO ,
× RELATED குடும்ப பிரச்னையில் மனைவி அளித்த...