சுக்காலியூர் சாலையில் தடுப்பு சுவர் ஓரம் படிந்த மணல் அகற்ற கோரிக்கை

கரூர்: கரூர் திருமாநிலையூர் சுக்காலியூர் சாலையில் உள்ள தடுப்புச் சுவரோரம் படிந்துள்ள மணல்களை விரைந்து அகற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் திருமாநிலையூர் சுக்காலியூர் இடையே அகலமான சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. திருச்சி, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மதுரை, சேலம், நாமக்கல், கோவை, ஈரோடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கரூர் மாநகரத்துக்குள் நுழையாமல், திருமாநிலையூர் சுக்காலியூர் வழிச்சாலையில் சென்று சுக்காலியூர் மேம்பாலத்தின் வழியாக பைபாஸ் சாலையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது.

இந்நிலையில், திருமாநிலையூர் முதல் சுக்காலியூர் செல்லாண்டிபாளையம், பண்டுதகாரன்புது£ர் போன்ற பல்வேறு பகுதிகள் உள்ளதால், பொதுமக்கள் நலன் கருதி சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், தடுப்புச் சுவரோரம் காற்றின் காரணமாக அதிகளவு மணல் பரவி கிடப்பதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுப்புச் சுவரை ஒட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு, சுவர் பகுதியில் பரவியுள்ள மணல்களை அகற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: