×

செல்லாண்டிபாளையம் அருகே குழந்தை தொழிலாளர் மீட்பு

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த குழந்தை தொழிலாளர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் பணியாற்றுவதாக இந்த பகுதி விஏஓ தாந்தோணிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோட்டாட்சியர் ரூபினா மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் ஆகியோர் கொண்ட குழுவினர், செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போதுஇ 17வயதுடைய குழந்தை தொழிலாளர் அங்கு பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, மீட்கப்பட்டு,காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தனியார் நிறுவனம் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Sellandipalayam ,
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்