ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் மகளிர் தின விழா

ஆவடி, மார்ச் 9: ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் டிஜிபி மற்றும் காவல் ஆணையர் பங்கேற்ற  மகளிர் தின விழா கெண்டாடப்பட்டது. ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் நேற்று மகளிர் தின சிறப்பு விழா எஸ்.எம்.நகரில் உள்ள காவலர் திருமண அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி சைலேந்திரபாபு, மனைவி சோபியா சைலேந்திர பாபு மற்றும் ஆவடி காவல் ஆணையர் துணைவியார் ஷில்பம் கபூர் ரத்தோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் அப்போலோ மருத்துவமனையின் சார்பில் காவலர்களுக்கு  ஸ்ட்ரீமிங் டெஸ்ட்க்கான வாகனம் வழங்கப்பட்டது. மேலும், ரங்கோலி, சிலம்பம், கராத்தே கலை நிகழ்ச்சிகளும்  நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், இணை காவல் ஆணையர் விஜயகுமார், நிர்வாகம் மற்றும் தலைமையிடம் காவல் துணை ஆணையர் உமையாள், துணை ஆணையர் பாஸ்கரன், போக்குவரத்து துணை ஆணையர் விஜயலட்சுமி மற்றும் காவல் உயர் அதிகாரிகள், திரை இசை பின்னனி பாடகி சிவாங்கி மற்றும் திரை இசை பாடகர்கள், காவலர்கள் குடும்பம் கலந்து கொண்டனர். கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உலக மகளிர் தின விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது கொண்டாடப்பட்டது. இதில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கண்ணன் ஏற்பாட்டில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) கார்த்திகேயன், சிறப்பு அழைப்பாளராக சிறப்பு தனித்துணை ஆட்சியர் (மறுவாழ்வு துறை) செண்பகவள்ளி, வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

Related Stories: