சாத்தான்குளம் பள்ளியில் முதல் பட்டமளிப்பு விழா

சாத்தான்குளம்:  சாத்தான்குளம் மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா, முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர்  டாக்டர் ஸ்டீபன் தலைமை வகித்தார். மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீர்செல்வம், மறைமாவட்ட பொருளாளர் சகாயம், மன்னார்புரம் பங்குதந்தை எட்வர்ட் முன்னிலை வகித்தனர். ஆங்கில சிறப்பு ஆசிரியர் ரோஜர் வரவேற்றார். சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தாளாளரும், முதல்வருமான பேட்ரிக் அந்தோணி விஜயன் ஆண்டறிக்கை சமர்பித்தார். விழாவில் சாத்தான்குளம் யூனியன் சேர்மன் ஜெயபதி, புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன், நூற்றாண்டு விழா ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் விக்டர், தூத்துக்குடி தென்மாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் ஜோசப் ஸ்டாலின், தென்மண்டல பொதுநிலையினர் பணியக இயக்குநர் மரியஅரசு, தென்மாவட்ட இளையோர் பணிக்குழுவின் கண்காணிப்பாளர் சேசுராஜ் ஆகியோர் பேசினர்.

விழாவில் பள்ளி யுகேஜி மாணவ, மாணவிகளுக்கு ஆயர் ஸ்டீபன் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். விளையாட்டு, கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. யோகா, கராத்தே உள்ளிட்ட கலைகள் மூலம் மாணவ, மாணவிகள் அசத்தினர். இதில் ஆயரின் செயலாளர் ரினோ, புதுக்கோட்டை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரூபர்ட், கள்ளிகுளம் ஒஎல்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் மணி, பங்குதந்தையர்கள் இருதயராஜா, இருதயராஜ், ஜெரால்டுரவி, வெனிஸ்குமார், மைக்கில்ஜெகதீஷ், ரெமிஜியூஸ், இருதயசாமி, ததேயூஸ், செல்வராயர், ரெத்தினராஜ், வசந்தன், செல்வரத்தினம், சந்திஷ்டன், பிரான்சிஸ், ரூபன், கிங்ஸ்டன், மறைமாவட்ட நில உடமைகளின் பொறுப்பாளர் ஜோ, சிந்தாமணி மெரிஸ் உள்ளிட்ட உதவி தந்தையர்கள், அருள்சகோதரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.   ஆங்கில ஆசிரியை கேத்ரின் நன்றி கூறினார்.

Related Stories: