நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீட்டுத்தொகைசிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு

நெல்லை, மார்ச் 8:  நெல்லை மாவட்டத்தில் நெடுஞ்சாலை பணிகளுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு  இழப்பீட்டுத் தொகை வழங்க சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இதுகுறித்து நெல்லை கலெக்டர் டாக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல்லை மாவட்டத்தில், நில எடுப்பு மற்றும் மேலாண்மை அலகில் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம், கல்லிடைக்குறிச்சி - அம்பாசமுத்திரம் புதிய புறவழிச்சாலை, முன்னீர்பள்ளம், தருவை, வி.எம்.சத்திரம், குலவணிகர்புரம் ரயில்வே மேம்பாலங்கள், வடக்கு வள்ளியூர் ரயில்வே சுரங்கப் பாதை மற்றும் திருச்செந்தூர் - அம்பாசமுத்திரம் (வழி-பாளையங்கோட்டை) சாலை, சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டத்தின் கீழ் விரிவாக்கம் ஆகிய பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்க சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட கிராமங்களில் நடக்கிறது.

நில உடமைதாரர்களின் பட்டா நகல், வில்லங்கச் சான்று, கிரைய ஆவணம், மூல ஆவணம், வாரிசு அடிப்படையில் பெற்ற நிலம் எனில், இறப்புச் சான்று (ம) வாரிசுச்சான்று, வங்கிக்கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) முன்பு ஆஜராகி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். முகாம் நடைபெறும் நாள், நடைபெறும் கிராமம்,    இடம் முறையே வருமாறு: இன்று மார்ச் 8ம் தேதி தச்சநல்லூர் கிராமம்  - நெல்லை தாலுகா அலுவலக கூட்ட அரங்கம்.    மார்ச் 21ம் தேதி வாகைகுளம்,  மேல அம்பாசமுத்திரம், வடக்கு கல்லிடைக்குறிச்சி கிராமங்கள் - அம்பை.

தாலுகா அலுவலக கூட்ட அரங்கம். மார்ச் 24ம் தேதி முன்னீர்பள்ளம், தருவை, வி.எம்.சத்திரம், குலவணிகர்புரம்     - தனி தாசில்தார் (நில எடுப்பு) அலுவலகம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலக வளாகம், ஏ.ஆர்.லைன் ரோடு, பாளையங்கோட்டை.    மார்ச் 28ம் தேதி வடக்கு வள்ளியூர்  பகுதி 1, 2 -    கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,  வள்ளியூர் -1. மார்ச் 10ம் தேதி     புதுக்குடி    - கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,  புதுக்குடி.    மார்ச் 21ம் தேதி      தெற்கு கல்லிடைக்குறிச்சி     - கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்,  தெற்கு கல்லிடைக்குறிச்சி.    மார்ச் 28ம் தேதி கோபாலசமுத்திரம்    - கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கோபாலசமுத்திரம்.    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: