திமுக அலுவலகம் மற்றும் போஸ் இல்ல திறப்பு விழா அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பு

திருச்சுழி: நரிக்குடி திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான செம்பொன் நெருஞ்சி ப.பா.போஸ் திருச்சுழியில் திமுக கழக கட்சி அலுவலகம் மற்றும் புதியதாக வீடுகள் கட்டியுள்ளார். இதன் திறப்பு விழா கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. நேற்று காலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக அலுவலகம் மற்றும் ப.பா.போஸ் இல்லத்தில் குத்து விளக்கேற்றினார். இந்நிகழ்ச்சியில் திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுத்தம்பி, நேர்முக உதவியாளர் பாலகுரு, திருச்சுழி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, வடக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பிச்சைநாதன், கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை துணை அமைப்பாளர் மைலி முத்துசாமி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் லோகநாதன், நரிக்குடி ஒன்றிய பகுதியிலுள்ள முன்னாள் ஒன்றிய சேர்மன் ஜெயராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ராசமாணிக்கம், ஒன்றிய பொருளாளர் கோபால், சிங்கராஜ், திமுக பிரமுகர்கள் தங்கப்பாண்டி, முத்துராமலிங்கம், மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: