தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிக்கு வீடு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தாயில்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நெல்சன் மனு அளித்து கூறுகையில், மாற்றுத்திறனாளியான நான், மனைவி மற்றும் ஒரு மாற்றுத்திறனாளி பெண் குழந்தை உட்பட 3 குழந்தைகளுடன் வாடகை குடியிருப்பில் வசித்து வருகிறேன். பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்யும் நிலையில், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வழங்க கோரி மனு அளித்தேன். வீடு வழங்குவதாக கூறிய நிலையில் உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என தெரிவித்து மனைவி, மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணா செய்தார். அதிகாரிகள் விசாரணை செய்து சிவகாசி ஆனையூரில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து சாவியை வழங்கினர்.

Related Stories: