×

கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் தேசிய மருந்தாக்கியல் மாநாடு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரியில் தேசிய மருந்தாக்கியல் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் பர்மசூட்டிகல் சயின்சஸ் அறக்கட்டளை, இந்தியன் பார்மசூட்டிகல் அசோஸியேஷன்ஸ் மற்றும் டிஏஎன்ஐபிஏ டிரஸ்ட் இணைந்து ‘உலக அளவில் தொழிற்சாலைகளில் தற்போதைய மருந்தாக்கியல் நுட்ப வளர்ச்சி’ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு கல்லூரி தலைவர் தரன் தலைமை வகித்தார். தாளாளர் அறிவழகி தரன், செயலாளர் சசி ஆனந்த், இயக்குனர் அர்ஜுன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் முனைவர் வெங்கடேஷன் வரவேற்றார். மதுரை மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துணை இயக்குனர் ரவிச்சந்திரன், விருதுநகர் மண்டல மருந்துகள் கட்டுப்பாட்டு துணை இயக்குனர் இளங்கோ, சென்னை டிஏஎன்ஐபிஏ டிரஸ்ட் செயலாளர் யூசுப், ஐகாரஸ் ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் ஆர்.இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மாநாட்டில் ஜெனெக்சியா பயோ செர்வின் ஆராய்ச்சி விஞ்ஞானி முகேஷ் சுப்பிரமணியன், ஓசூர் மைலான் லெபாரட்டரிஸ் நிறுவன உற்பத்தி இணை இயக்குநர் பிரசாத் பழனிச்சாமி, ஐகாரஸ் ஹெல்த் கேர் நிறுவன இயக்குநர் ஆனந்த் செல்வம், பெங்களூரு பார்மாக்யூஸ் எல்எல்பி இயக்குநர் சிவக்குமார், ஈன்நெக்ஸ்ட் பயோசயின்சஸ் இயக்குநர் தட்சணா மூர்த்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். கல்லூரி தலைவர் தரன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Tags : National Conference on Pharmacology ,Kalasalingam College of Pharmacy ,
× RELATED அருள்மிகு கலசலிங்கம் பார்மசி...