×

தமிழ் இலக்கிய மன்ற விழா

தேனி: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் 22ம் ஆண்டு அமுதசுரபி தமிழ் இலக்கிய மன்ற விழா நடத்தப்பட்டது. விழாவிற்கு உறவின்முறைத் தலைவர் டாக்டர். ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்று பேசினார். விழாவில் இலங்கை வானொளி தமிழ் அறிவிப்பாளர் பிஎச் அப்துல்ஹமீத் எழுதிய வானலைகளில் ஒரு வழிபோக்கன் எனும் நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நூல் குறித்து பட்டி மன்ற நடுவர் பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார். திரைப்பட பாடகர் முகேஷ் பாடல்களை பாடினார்.ஆடிட்டர் ஜெகதீஷ் நூலினை அறிமுகம் செய்து பேசினார்.இதில் கல்லூரி இணை செயலாளர்கள் செண்பகராஜன், அருண், கோடை பண்பலை நிகழ்ச்சி ஒளிபரப்பு தலைவர் ஜான்பிரதாப்குமார், திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழு நிர்வாக இயக்குநர் செல்லமுத்தையா ஆகியோர் பேசினர். இவ்விழாவின்போது 27 சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். கல்லூரி முதல்வர் சித்ரா நன்றி கூறினார்.

Tags : Tamil Literary Forum Festival ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி