தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் உள்ள விவசாயநிலத்தில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. விபத்தில் பெண் பலி

பெரியகுளம்: போடி அருகே குப்பிநாயக்கன்பட்டி சேர்ந்த கருப்பையா மகன் தீபக்குமார் (21). இவர் தனது தாயார் அம்சவல்லியுடன் (50) போடியிலிருந்து பெரியகுளத்தில் ஒரு துக்க விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக டூவீலரில் சென்றார். பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் சாலையில் சென்றபோது, வேகத்தடுப்பின் மீது கவனக்குறைவாக ஏறியதில் அம்சவல்லி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த பெரியகுளம் தென்கரை போலீசார் இறந்து கிடந்த அம்சவல்லி உடலை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயங்களுடன் மீட்கப்பட் தீபக்குமார் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து பெரியகுளம் தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: