×

பள்ளத்தூர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

காரைக்குடி: காரைக்குடி அருகே பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி மகளிர் கலைக்கல்லூரியின் 55வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் விஜயராணி வரவேற்றார். கல்லூரி செயலாளர் அண்ணாமலை அனந்த பத்மனாபன் விழாவை துவக்கி வைத்தார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி 1179 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பட்டம் பெற்ற அனைத்து மாணவிகளுக்கும் இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை முனைவர் ஆனந்தசெல்வி செய்திருந்தார்.

Tags : Pallathur College ,
× RELATED கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்