பரமக்குடி: பரமக்குடியில் அமைந்துள்ள சக்தி குமரன் செந்தில் ஆலயத்தில் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக இக்கோயிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை வைகை ஆற்றின் மையப் பகுதியில் இருந்து புறப்பட்ட பால்குடம் நகரின் முக்கிய வீதிகளான பெரிய கடை வீதி, பெருமாள் கோவில் தெரு, காந்தி சிலை, முத்தாலம்மன் கோவில் படித்துறை வழியாக ஆலயத்தை வந்தடைந்தது.தொடர்ந்து, ஆலயத்தில் வீற்றிருக்கும் சக்தி குமரன் செந்தில் ஆண்டவனுக்கும் ஆறுமுக பெருமானுக்கும் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.