ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சமையல் கேஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கப் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பில் கேஸ் விலை உயர்வை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் சகாயம் தலைமை வகித்தார். தாலுகா தலைவர் வெங்கடேஸ்வரி முன்னிலை வகித்தார். சமையல் கேஸ் விலை உயர்ந்து கொண்டே செல்வதை கண்டித்து கேஸ் சிலிண்டர்கள், விறகு அடுப்பு வைத்து பெண்கள் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். தாலுகா செயலாளர் ஆரோக்கிய நிர்மலா, பொருளாளர் சுமதி உள்ளிட்ட பலர் கேஸ் விலை உயர்வு மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து பேசினர். மாதர் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.