×

உசிலம்பட்டியில் சிலம்பம் போட்டி

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் சிலம்பம் போட்டி நடைபெற்றது.உசிலம்பட்டியில் சிலம்பாட்டம் சிலம்ப பட்டை வழங்கும் விழாவில் மதுரை சிலம்பாட்ட கழகம் மாவட்ட செயலாளர் எஸ். எம். மணி தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்ட சிலம்பாட்ட கழக மாணவர் அணி செயலாளர் வளரி முத்து உசிலம்பட்டி சிலம்பாட்ட கழக ஆசிரியர் இளங்குமரன், சிலம்பம் ஆசிரியர்கள் யுவராஜ், அழகு பாண்டி, நடராஜன், ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.உசிலம்பட்டி கல்வி மாவட்ட பகுதியில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சிலம்பாட்ட 300 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் விளையாடி சிலம்ப பட்டை பெற்றனர்.

Tags : Cilambam ,Usilambatti ,
× RELATED அரசு பள்ளிகளில் சிலம்பம் பயிற்சியாளர்கள் நியமிக்க கோரிக்கை