×

திருமங்கலம் கல்லூரியில் ரத்ததான முகாம்

திருமங்கலம்: திருமங்கலம் அரசு கல்லூரியில் நடந்த ரத்ததான முகாமில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலத்திட்டம் சார்பில் மதுரை அரசுமருத்துவமனை மற்றும் திருமங்கலம் ஜெயம் அரிமா சங்கம் இணைந்து ரத்ததான முகாமினை நடத்தினர். கப்பலூரில் உள்ள அரசுக்கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஹரிநாராயணன் தலைமை வகித்தார். மதுரை லயன் மாவட்ட முதலாம் துணை ஆளுனர் ராதாகிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார்.

அரிமாசங்கத்தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்த்துறை தலைவர் கரு.முருகேசன், அரசுமருத்துவமனை ரத்தவங்கி ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். முகாமில் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த 78 மாணவர்கள் தங்களது ரத்தத்தினை தானமாக வழங்கினர். இதில் 50 யூனிட் ரத்தம் பெறப்பட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழ்த்துறை பேராசிரியர் தீபா, அரிமா சங்க செயலாளர் ரமேஷ் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். ஜெயபாலகிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.


Tags : Tirumangalam ,College ,
× RELATED தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்து விவசாயி பலி