×

மின்வேலி அமைத்து விலங்குகள் வேட்டை கொடைக்கானலில்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பெரும்பள்ளம் வனச்சரகம் செம்பாரங்குளம் பகுதியில் அப்துல் ரஜாக் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் வன பாதுகாப்பு சிறப்பு படையினர் உதவி வனப்பாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் அந்த தோட்டத்தில் சோதனை நடத்தினர். அப்போது தோட்டத்தில் காட்டு மாடு, கடமான், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி ஆகியவற்றின் எலும்பு கூடுகள் புதைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து வனத்துறையினர் அவற்றை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து அப்துல் ரஜாக், அவரது தந்தை முகமது அப்பாஸ் ஒலி, தோட்ட தொழிலாளி பாலமுருகன் ஆகியோரை தேடி வருகின்னர்.

Tags : Kodaikanal ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை