லால்குடி: லால்குடி அருகே மேலரசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார். திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியம் மேலரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பள்ளி தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததால் பள்ளியின் நூற்றாண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அரங்கசாமி வரவேற்று பேசினார் புள்ளம்பாடி ஒன்றிய குழு தலைவர் ரஷ்யா கோல்டன் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் வடிவேலு, ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, முன்னாள் தலைவர் சோமு முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ பரிசுகள் வழங்கி குழந்தைகளை வாழ்த்தி பேசினார். விழாவில் கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் தொழிலதிபர் ரவி மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் தன்னார்வலர்கள், பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.