×

திருத்துறைப்பூண்டியில் பால்வள ஆர்வலர்கள் குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், தமிழ்நாடு நீர்பாசன மேலாண்மை நவீனப்படுத்தும் திட்டம் காவேரி டெல்டா உபவடிநிலப்பகுதி திட்டத்தின் கீழ், பால் வள ஆர்வலர் குழு உறுப்பினர்களுக்கு, ஒருநாள் பயிற்சி திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கால்நடை பாரமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமை வகித்தார். பயிற்சியில் பால்வளத்தை மேம்படுத்த செய்யவேண்டிய பணிகள் குறித்தும், கறவை மாடுகளுக்கு ஏற்படும் நோய்கள், தடுக்கும் முறைகள், தடுப்பூசி திட்டங்கள், தீவன புல் உற்பத்தி முறைகள், பால் பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள், விற்பனை, மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், அரசு மானிய திட்டங்கள், வங்கி கடனுதவி குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. நிகழச்சியில் கால்நடை மருத்துவர் சந்திரன் மற்றும் பால்வள ஆர்வலர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dairy Activists Group ,Thiruthurapundi ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...