முத்துப்பேட்டை: கீழநம்மங்குறிச்சி அரசு பள்ளியில் கட்டுமான பணிகளை கல்வி அதிகாரி ஆய்வு ெசய்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்று பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்ததால், பழுதான கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும் என்று பொதுமக்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து சமீபத்தில் தமிழக அரசு சார்பில் ரூ.33.2லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் ராமசாமி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அங்கு நடைபெறும் புதிய கட்டிடம் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு பணிகள் முறையாக நடைபெறுகிறதா? என்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளி தலைமையாசிரியர் ஆசைத்தம்பி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.