×

மாசிமகத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிஷேகம்

க.பரமத்தி: க.பரமத்தி ஒன்றியம், குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் அம்மன் தமோ குணத்தில் பகவதியாகவும், ரஜோ குணத்தில் துர்கையாகவும், சத்துவ குணத்தால் அம்பாளாகவும், 64 கலை வடிவங்களாகவும் 84 லட்சுமி யோனி பேதங்களாகவும் 64 கலை உபசார பூஜைக்கு உரியவளாகவும் வீற்றுள்ளார். இந்த கோயிலில் விநாயகர், குன்னுடையான், பொன்னர், சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் ஆகிய சுவாமிகளுக்கு தினமும் ஒரு கால பூஜைகளும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் தினசரி ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. நேற்று மாசி மாத பிறப்பையொட்டி காலை விசேஷ பூஜை நடத்தப்பட்டது. அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்கார கோலத்தில் அம்மன் காட்சி அளித்தார். பின்னர் பால், மஞ்சள் பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் பெண் பக்தர்கள் பங்கேற்று விரதம் தொடங்கினர்.அதேபோல, உப்புபாளையம் வீரமாத்தியம்மன் கோயில், க.பரமத்தி மாரியம்மன் கோயில், சூடாமணி மாசாணியம்மன் கோயில், புன்னம் அங்காளம்மன் கோயில், ஆரியூர் செல்லாண்டியம்மன், அத்திப்பாளையம் பொன்னாச்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சுற்று பகுதி பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Tags : Masimagam ,
× RELATED இலங்கைத் தமிழர்களுக்கு 72...