×

குளித்தலை தொகுதியில் 1 முதல் 8ம் வகுப்பு வரை கல்வி தரம் எவ்வாறு உள்ளது

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வருகை புரிந்தார். அப்போது குளித்தலை வட்டார கல்வி அலுவலகம் சென்று ஆய்வு மேற்கொண்டார். 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் எவ்வாறு செயல்படுகிறது. மாணவர்களின் கல்வி தரம் எந்த அளவில் இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என கேட்டறிந்து வருகை பதிவேட்டையும், அலுவலக கோப்புகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, எம் எல் ஏ மாணிக்கம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் ரமணி, ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழ்நாட்டில் 234 தொகுதியில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மற்றும் முதன்மை கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள், நிதி உதவி பெறும் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத இன்டர்நேஷனல் பள்ளிகள் உட்பட 77 வகையான பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள இத்துறைக்கு அனுமதி உள்ளது.


இந்நிலையில் இன்டர்நேஷனல் பள்ளிகளை ஆய்வுகள் மேற்கொள்ளும் போது, பள்ளியின் செயல்பாடுகள் தமிழக அரசு பள்ளிகளுக்கும் தேவை இருப்பதால் தங்கள் பள்ளிகள் செயல்பாடுகள் குறித்து விளக்கமாக தெளிவுபடுத்தவும் என கூறி வருகிறேன் . இதேபோல, குளித்தலை தொகுதியில் இத்தொகுதி எம்எல்ஏ மாணிக்கத்துடன் இணைந்து வட்டார கல்வி அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டேன் . பள்ளி மாணவர்களுக்கு அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் கனவை நினைவாக்க கல்வித் துறை அதிகாரிகள் சுழன்று பணியாற்றி வருகிறார்கள். முதன் முதலில் திருவள்ளுவர் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தறிவு திட்டம் தொடங்கி வைத்து 2025 க்குள் இலக்கை நிர்ணயித்து ஒன்று முதல் மூன்று வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலம், தமிழ், மற்றும் எழுத்து பயிற்சி ஆகியவற்றில் திறன்மிக்க மாணவர்களாக வரவேண்டும் என்பதற்காக முழுமையாக பணியாற்றி வருகிறோம்.

தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபாடு இன்றி தொகுதி எம்எல்ஏ உடன் சென்று ஆய்வு செய்து இந்த ஆய்வு குறித்த முதலமைச்சர் அவர்களிடம் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கிறேன். வரும் காலங்களில் அரசு பள்ளிகளில் கிராமப்புற நகர்புறத்தில் இருந்து குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முனைப்போடு செயல்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் இ .ரெஜிஸ்டர் என்ற பதிவேட்டினை அந்தந்த பகுதியில் வைத்து அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளின் விபரங்களை அப்பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் , பி ஆர் டி மையப் பணியாளர்கள் தொடர்பு கொண்டு பதிவு செய்து கல்வி வயது வந்தவுடன் அக்குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முனைப்போடு செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் வரும் காலங்களில் கிராமப்புற நகர்புறங்களில் இருந்து ஏராளமான பள்ளி குழந்தைகள் அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை ஏற்படும். இதனால் அரசு பள்ளியின் தரமும் உயரும் கல்வியின் தரமும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Kulithalai ,
× RELATED குளித்தலை அருகே ஓராண்டாக முறையாக...