ஆதி தமிழர் பேரவை கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, மார்ச் 7: தர்மபுரியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை கைது செய்யக்கோரி, மாவட்ட ஆதிதமிழர் பேரவை சார்பில், நேற்று கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் வீரசிவா கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது அருந்ததியர் சமூக மக்களை அவதூறாக பேசிய, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தின் போது, திடீரென சீமான் உருவ பொம்மையை பேரவையினர் எரித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சக்திவேல், குமரன், சுரேஷ், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசை கண்டித்து

Related Stories: