நீலகிரி புத்தக திருவிழா அலைமோதும் மாணவர்கள் கூட்டம்

ஊட்டி,மார்ச்7: ஊட்டியில் நடைபெற்று வரும் நீலகிரி புத்தக திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்த தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், புத்தக திருவிழா நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி மாவட்டம் ேதாறும் புத்தக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா - 2023 நேற்று முன்தினம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் துவங்கியது. இதனை நீலகிரி தொகுதி எம்பி., ராசா துவக்கி வைத்தார். இதில் 50க்கும் மேற்பட்ட அரங்குகளில் பல்வேறு பதிப்பகத்தார்கள் புத்தகங்களை வைத்திருந்தனர். இதுதவிர பல்வேறு அரசுத்துறை சார்பிலும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் நர்த்தகி நடராஜ் பங்கேற்ற கூத்தும் தமிழும் என்ற நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. புத்தக கண்காட்சி முதல் நாளில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 170க்கு புத்தகங்கள் விற்பனையானது. சுமார் 2500 பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். தொடர்ந்து செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சரின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஒளிப்பரப்பட்ட குறும்படத்தினை நீலகிரி எம்பி., ராசா பார்வையிட்டார்.

புத்தக திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்றும் அரங்குகளில் பள்ளி மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதியது. மாணவியர்கள் அரங்குகளை பார்வையிட்டு தங்களுக்கு ேதவையான புத்தகங்களை வாங்கி சென்றனர்.பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வாழ்க்கை தான் இலக்கியம் என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இலக்கிய பேச்சாளர் இமயம் பேசினார். தொடர்ந்து இசை நிகழ்ச்சி நடைபெற்றன.

Related Stories: