வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி

வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் கரூர், தேனி, கம்பம், சின்னமனூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டது. இரவு பகல் ஆட்டங்களாக இரண்டு நாட்கள் நடைபெற்று முடிந்த கபடி போட்டிகளில் கரூர் அணி முதல் இடத்தையும், மயிலாடும்பாறை, தர்மராஜபுரம் அணிகள் இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்தது.

போட்டிகளில் நிறைவு நாளான நேற்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் ரொக்கப் பரிசை வழங்கினார். பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது தி.மு.க கடமலை-மயிலை ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்பிரமணி, தங்கப்பாண்டி, ஒன்றியக்குழு தலைவர் சித்ராசுரேஷ், முன்னாள் கவுன்சிலர் மாடசாமி, கவுன்சிலர்கள் பிரபாகரன் மச்சக்காளை, ஆயுதவள்ளிமணிமாறன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் குறிஞ்சி மாடசாமி, ஊராட்சி கழகச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன் ஆனந்தன் மாநில பொதுக்குழு உறுப்பினர் சேரன் சமூக ஆர்வலர் அலெக்ஸ், கபடி குழு நண்பர்கள் செல்லப்பாண்டி ,கௌதம், வாஞ்சிநாதன், அபிஷேக் ,உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கபடி போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தர்மராஜபுரம் கபடி நண்பர்கள் குழு செய்திருந்தனர்.

Related Stories: