அரசுப் பள்ளியில் விளையாட்டு விழா

தேவகோட்டை:  தேவகோட்டை அருகே கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் மங்களம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள்,  பெற்றோர்களுக்கான விளையாட்டுப்போட்டி நடந்தது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவி ஜெயந்தி தலைமை வகித்தார். தலைமையாசிரியை சுப.கவிதா வரவேற்றார். 1 முதல் 8 வரையிலான மாணவ மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. 1ம் வகுப்பு மாணவர்கள் பலூன் உடைத்தல் போட்டியில் முதல் பரிசு கனிஷ்கா, இரண்டாம் பரிசு சர்வேஷ், மூன்றாம் பரிசு சேனாதிகா பெற்றனர். 2ம் வகுப்பு மாணவர்கள் கல் எடுத்தல் போட்டியில் முதல் பரிசு சசிபாலன், இரண்டாம் பரிசு பிரதீஸ்,  மூன்றாம் பரிசு ஹரிபிரதியூஷ் பெற்றனர்.

மூன்றாம் வகுப்பு மாணவர்கள் தவளைஓட்டம் போட்டியில் முதல் பரிசு நெண்டீஸ்வரன், இரண்டாம் பரிசு பிரஜித்,  மூன்றாம் பரிசு நவநீதா பெற்றனர். 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், லெமன் ஸ்பூன் எடுத்தல், தண்ணீர் நிரப்புதல், ஸ்கிப்பிங் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெற்றோர்களுக்கு பலூன் தூக்கிப்   போடுதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. ஆசிரியைகள் கவிதா, பொன்னழகு மஞ்சு, ஸ்ரீகலா, பாண்டிச்செல்வி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியை ராணி நன்றி கூறினார்.

Related Stories: