பழநி கோயிலில் 1008 சங்குகள் வைத்து சிறப்பு யாகம்

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் மாசிமகத்தையொட்டி உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்கவும் நேற்று 1008 சங்குகள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. முன்னதாக பாரவேல் மண்டபத்தில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் 1008 சங்குகள் ஊற்றப்பட்டது. தொடர்ந்து கலசத்தில் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. பின்னர் விநாயகர் வழிபாடு, புண்ணியாகவாஜனம், பூர்ணாகுதி போன்றவை நடந்தது.

தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கலசங்கள் மற்றும் சங்குகள் கோயில் வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, உச்சி காலத்தில் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்கள், உபயதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. பழநி கோயில் அர்ச்சக ஸ்தானீகர் அமிர்தலிங்கம் மற்றும் செல்வசுப்பிரமணியம் தலைமையிலான சிவாச்சாரியர்கள் பூஜைகளை மேற்கொண்டனர்.

Related Stories: