×

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் குறித்து போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவ ட்ட ஏடிஎஸ்பி பாண்டியன் (பெண்கள் மற்றும் குழந் தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு சிறப்பு பிரிவு) தலைமையில், நேற்று 6-ம் தேதி பெரம்பலூர் மாவட்ட த்தில் உள்ள அனைத்து பள் ளிகளிலும் பயிலும் மாணவ- மாணவிகளிடம் சம்மந் தப்பட்ட காவல் நிலையத் தில் உள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள்இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் சாலை விதிகள் குறித்தும் இரு சக் கர வாகனத்தில் பயணம் செய்யும் போது கட்டாயம் தலைக் கவசம் அணிந்து தான் பயணிக்க வேண்டும் எனவும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச் சியில் மாணவ- மாணவிக ளிடம் காவல்துறையினர் பேசியதாவது :

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், பாடாலூர், குன்னம், மங்கள மேடு, அரும்பாவூர், மருவத் தூர், வி.களத்தூர், கை.களத்தூர் காவல் நிலையங் ள், பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம், மாவட்ட மதுவிலக்கு போலீசார் என மாவட்டத்தில் உள்ள ஒவ்வொருகாவல் நிலை யத்திலும் செயல்படும் பெ ண்கள் உதவி மையம், இல வச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளு க்கு எதிரான குற்றச்சாட்டு க்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைப் பேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பி ற்காக செயல்படும் இலவச உதவிஎண் 14417குறித்தும், காவல் உதவி செயலி குறி த்தும் விழிப்புணர்வு ஏற்படு த்தினர்.

மேலும் நீங்கள்பயிலும் பள் ளியில் உங்களது தோழிக் கோ அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ 18 வயது பூர்த்தியடையாமல் அவர்களது பெற்றோர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள் என்றால் நீங் கள் தைரியமாக அருகில் உள்ள காவல் நிலையத்தி ற்கு தகவல் தெரிவிக்க லாம் அல்லது 1098 என்ற இலவச தொலைப்பேசி எண்ணிற்கு தகவல் தெரி விக்கலாம்.
தகவல் தெரி வித்தது யாரென்று வெளி யே சொல்லாமல் ரகசியம் காக்கப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...