×

நெல்லையில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் சிலைக்கு அப்துல்வஹாப் எம்எல்ஏ மரியாதை

நெல்லை, மார்ச் 7: அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் சேதுராமபாண்டியன் 8ம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நெல்லை சி.என்.கிராமத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அப்துல்வஹாப் எல்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நெல்லை சி.என்.கிராமத்தில் அகில இந்திய தேவர் பேரவை முன்னாள் தலைவர் மா.சேதுராமபாண்டியன் 8ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழக நிறுவனத்தலைவர் ஏ.எம்.மூர்த்திதேவர் ஏற்பாட்டில் நடந்தது. இதையொட்டி சேதுராமபாண்டியன் உருவ சிலைக்கு நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ, நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சி பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் நெல்லை மாநகர திமுக துணைச் செயலாளர் மூளிகுளம் பிரபு, நெல்லை மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவரும், திமுக மாநகர துணைச் செயலாளருமான சுதா மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிவசுப்பு, 29வது வார்டு அமைப்பாளர் வேல்ராஜா, 29வது வட்ட பிரதிநிதி ஹென்றிராஜன், மகளிரணி அனிதா, திருப்பதி, பேச்சி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் ராமசுப்பு, தலைமை நிலைய செயலாளர் ரவிச்சந்திரன், துணை பொதுச்செயலாளர் நயினார்பாண்டியன், மாநில அமைப்புச் செயலாளர் மாரித்தேவர், மாநில இளைஞரணி செயலாளர் வைரத்தேவர், மகளிர் அணி செயலாளர் கலைச்செல்வி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Abdulwahab ,MLA ,All India ,Devar Parvadar ,Nellai ,
× RELATED நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வை ரத்து...