×

கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் மாசிமக தேரோட்டம்

கரூர்: கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் புகழ்பெற்ற கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி தேரோட்ட விழாவும், மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். இதனடிப்படையில், கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் நேற்று மாசி மகத் திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி பிப்ரவரி 26ம் தேதி அன்று காலை கோயிலில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மார்ச் 1ம்தேதி வெள்ளி கருட சேவையும், 4ம்தேதி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று காலை 9மணியளவில் நடைபெற்றது. கோயிலில் இருந்து 9 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 10 மணியளவில் தேர் நிலையை அடைந்தது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் தேரோட்டம் 8ம்தேதி மாலை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர், செயல் அலுவலர் உள்பட அனைத்து நிர்வாகிகளும் செய்து வருகின்றனர்.

Tags : Karur Thanthonimalai ,Kalyana ,Venkataramana ,Swamy Temple ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் கோயில்களில்...