×

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்: கலெக்டர் நலத்திட்ட உதவி வழங்கினார்

கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார். இந்த கூட்டத்தில், ஓய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 622 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 59 மனுக்கள் பெறப்பட்டது.

மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2 நபர்களுக்கு ரூ.9,998 மதிப்பில் காதொலி கருவிகளும், 1 நபருக்கு ரூ.26,800 மதிப்பில் செயற்கைகால், 1 நபருக்கு ரூ.1,85,300 மதிப்பில் செயற்கை கால், 2 நபர்களுக்கு ரூ.15,800 மதிப்பில் சக்கர நாற்காலியும், 1 நபருக்கு புத்தக பையும், சிறுசேமிப்புத்துறை சார்பில உலக சிக்கன நாளை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டி, சிறுசேமிப்பு குறித்த சொற்தொடர்கள் போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் என மொத்தம் 8 பயனாளிகளுக்கு ரூ. 2,37,898 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி உள்பட அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Public Grievance Day ,Karur Collector's Office ,
× RELATED கரூர் கலெக்டர் அலுவலகத்தில்