×

திரளான பக்தர்கள் தரிசனம் மண்ணச்சநல்லூரில் ரூ.21.63 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

முசிறி: மண்ணச்சநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி மறைமுக ஏலத்தில் ரூபாய் 21.63 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெறுகிறது. தற்போது ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி குறைந்தபட்சமாக ரூ. 7129க்கும் அதிகபட்சமாக ரூ. 7839க்கும் விற்கப்பட்டது. இறுதியில் 292.66 குவிண்டால் பருத்தி ரூ.21.63 லட்சத்திற்கு விற்கப்பட்டது. திருச்சி விற்பனைக் குழு செயலாளர் சுரேஷ் பாபு தலைமையில், விளம்பர பிரச்சார கண்காணிப்பாளர் கண்மணி மற்றும் விற்பனைக் கூட பணியாளர்கள் முன்னின்று ஏலத்தை நடத்தினர்.


Tags : Manchanallur ,
× RELATED மோடியை வீட்டு வாசலில் நிற்க வைத்தவர்...