சோழமாதேவியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் பால்குட திருவிழா

திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத பால்குட திருவிழா வெகு விமசிசையாக நடந்தது. திருவெறும்பூர் அருகே உள்ள சோழமாதேவியில்  ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் பால் குடத்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பால்குடம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவில் குழந்தை பாக்கியம், திருமணம், வேலைவாய்ப்பு, தொழில் முன்னேற்றம், உடல் நலம் வேண்டி சுமார் 250 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வீதி வலம் வந்து கோயிலை வந்து அடைந்தனர். இதில் சில பக்தர்கள் கரும்புத் தொட்டில் சுமந்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலை அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் சோழமாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: