ஆதி மாரியம்மன் கோவிலில் சூடம் ஏற்றிய போது தீப்பிடித்து பெண் பக்தர் காயம்

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேர் நிலையை அடைந்த பிறகு பக்தர்கள் தேருக்கு முன்பாக சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். அப்போது பெண் பக்தர் ஒருவர் சூடம் ஏற்றி வழிபட்ட போது திடீரென அவரது சேலையில் தீ பற்றியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தீக்காயம் அடைந்த அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து சமயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: