×

திருச்சி குழுமாயி அம்மன் கோயிலில் 9ம் தேதி குட்டி குடித்தல் விழா

திருச்சி: திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா இன்று (6ம் தேதி) இரவு மறுகாப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. பிரசித்தி பெற்ற குட்டி குடித்தல் விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.
திருச்சி புத்தூரில் உய்யகொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் இடத்தில் குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மாசி மாதம் நடைபெறும் குட்டிக்குடி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி கோயிலில் காப்புக்கட்டப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு (6ம் தேதி) மறுகாப்பு கட்டுதலுடன் விழா துவங்குகிறது. நாளை (7ம் தேதி) புத்தூர் கிராம மக்கள் சார்பில் காளியாவிட்டம் நடக்கிறது. 8ம் தேதி சுத்த பூஜை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, பக்தர்கள் ஆட்டுக்கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் நிறைவேற்றும் குட்டிக்குடி நிகழ்ச்சி 9ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியில் முதல் மரியாதையாக, கலெக்டர் அலுவலகம் சார்பில் முதல் ஆட்டுக்கிடா வழங்கப்படும்.

10ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா மற்றும் 11ம் தேதி சாமி குடிபுகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. காற்றாலை தொழில்நுட்பத்தை அரசு பள்ளி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தும் போது, மரபுசாரா எரிசக்தி குறித்தும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் மின்னாற்றல் தயாரிப்பது குறித்தும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக இருக்கும், சூரிய மின்சக்தி, நீர், மின்சாரம் போன்று சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத காற்றாலை மூலம் மின் உற்பத்தியின் பயன்பாடு இருக்கும்.

Tags : Kuttithalma ,ceremony ,Tiruchi Kurumaai ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா