திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி மும்முரம்

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக துவக்கப்பட்டு மூன்றாம் ஆண்டாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கல்லணை காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய பகுதிகளில் ரூ. 122.6 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணிகளில் இதுவும் ஒன்று. பணிகள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்று வந்த நிலையில் ஜூன் மாதம் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்ததால் அப்பணிகள் நிறுத்தப்பட்டது. இந்தஆண்டு மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் நிறுத்தப்பட்டு தற்பொழுது இரவு பகலாக இப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதில் பூண்டி காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டும்பணி நடைபெற்று வருகிறது.

மேலும் காவிரிஆற்றில் தென்கரை பகுதியில் பழமார்நேரி, அதன் அருகில் இருக்கும் கிராமப்பகுதி குடியிருப்பு பகுதிகளில் காவிரிஆற்றின் கரை ஓரத்தில் தண்ணீர் செல்லும்போது பாதிப்பு ஏற்படா வண்ணம் சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டும்பணியும் நடைபெற்று வருகிறது. மேலும் தடுப்பணை கீழ்புறம் மண்அரிப்பை தடுக்கும் விதமாக கருங்கல்கள் கொட்டப்பட்டுள்ளது. இப்பணி கடந்தவாரம் துவங்கி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணையால் அணையின் மேற்கு பகுதியில் தண்ணீர் தேக்கப்பட்டு இருபுறமும் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையின்றி விவசாயம் செய்ய தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள விவசாயிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Related Stories: