சேலத்தில் மினிமாரத்தான்

சேலம்: சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, சேலத்தில் நேற்று பெண்கள் மினி மாரத்தான் போட்டி மெய்யனூரில் தொடங்கியது. முன்னாள் இந்திய மகளிர் தேசிய கூடைப்பந்து அணி தலைவர் அனிதா பால்துரை கலந்து கொண்டு மினிமாரத்தானை போட்டியை தொடங்கி வைத்தார். சேலம் மெய்யனூரில் தொடங்கிய மின் மாரத்தான், 5 ரோடு வழியாக சாரதா கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த மினிமாரத்தானில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில், சர்வதேச கூடைபந்து வீரர் புருஷோத்தமன், மருத்துவர்கள் நடனசபாபதி, விஜயலட்சுமி, வாசுகி, பாலு, கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் ஆனந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: