×

லேத் பட்டறை உரிமையாளருக்கு ₹40 ஆயிரம் அபராதம்

நாமக்கல்: குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்த்திய ஓட்டல் உரிமையாளருக்கு, ₹40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவுப்படி, தொழிலாளர் துறையினர் குழந்தை தொழிலாளர் தொடர்பாக, மாவட்டம் முழுவதும், தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு நாமக்கல் பகுதியில் கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள், வர்த்தக நிறுவனங்கள், டிரான்ஸ்போர்ட் கம்பெனிகள் மற்றும் பட்டறைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, நாமக்கல்லில் ஒரு லேத் பட்டறையில் குழந்தை தொழிலாளர் ஒருவரை பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது. குழந்தை தொழிலாளரை அலுவலர்கள் மீட்டு, குழந்தைகள் இல்லத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து லேத் பட்டறை உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நாமக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குழந்தை தொழிலாளரை பணிக்கு அமர்ந்திய உரிமையாளருக்கு, ₹40 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.



Tags : Lathe ,
× RELATED பூந்தமல்லி அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் தானம்