×

மாணவர்கள் பங்கேற்பு குத்தாலம் திமுக கிழக்கு ஒன்றியத்தில்

3 ஊராட்சிகளில் தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழா தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் அனந்தநல்லூர் ஊராட்சியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமை வகித்தார். குத்தாலம் திமுக கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் தியாகராஜன், ஒன்றிய துணை செயலாளர்கள் சுந்தர்ராஜன், சக்தி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை.சங்கர் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமைக்கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். இதே போல பெருஞ்சேரி மற்றும் கொடைவிளாகம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Tags : Guthalam ,DMK East Union ,
× RELATED குத்தாலம் அருகே சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்